Showing posts with label பொன் கிறுக்கல்கள். Show all posts
Showing posts with label பொன் கிறுக்கல்கள். Show all posts

Sunday, December 15, 2013

பனிக் காலம்

Old picture from Internet

கூட்டை அடைந்த பறவை போல,
வளைக்குள் ஒளிந்த எலியை போல,
நத்தை ஓட்டுக்குள் சுருண்ட வாழ்கை
வரும் மூன்று திங்களுக்கு!

உள்ளொன்று புறமொன்று அணிந்து,
மேலொரு அங்கி அணிந்து,
கழுத்திலே ஸ்கார்ப் அணிந்து,...
காது மறைக்க குல்லாய் அணிந்து,
கைக்கு விதவிதமாய் கையுறை அணிந்து,
காலுக்கு கம்பளி சாக்ஸ் அணிந்து,
அதன் மேலே ஷு அணிந்து,
இத்தனை அணிந்தும்
உள்ளுடல் சுருக்கி
வெளி செல்ல வேண்டும் கிளியே!
பனிக்காலம் வந்ததடி கிளியே!
வாழ்கை சோம்பல் ஆனதடி கிளியே!


                      Winter 2013 Start already!

Wednesday, October 2, 2013

பொன் கிறுக்கல்கள் : இருப்பு


அன்பின் இருப்பு வெறுப்பிலே!

இளமையின் இருப்பு முதுமையிலே!

ஒளியின் இருப்பு இருளிலே!

ஆண்மையின்  இருப்பு பெண்மையிலே!

பகலின் இருப்பு இரவிலே!

வெயிலின் இருப்பு நிழலிலே!

மழையின் இருப்பு மேகத்திலே!

ஈகையின் இருப்பு இரத்தலிலே!

உணவின் இருப்பு பசியிலே!

உடலின் இருப்பு வலியிலே

உயிரின் இருப்பு இறப்பிலே!

ஒன்றின் இருப்பு மற்றொன்றிலே!